தமிழில் மின் அஞ்சல் செய்வது மிகவும் எளிதானது

ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் Domain பெயர்கள் அறிமுகம் செய்வது குறித்த பணிகளில் ICANN at-Large advisory committee (ALAC) அமைப்பு உபயோகிப்பாளர் கருத்துக்களை கவனித்து உபயோகிப்பாளருக்கு பங்கம் இல்லாத திட்டங்களை ICANN நிறுவனம் எடுக்க உதவுகிறது.

IDN என்பது Internationalized Domain Names என்பதாகும். தற்சமயம் இணைய தளங்களின் (Website) விலாசங்களை ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம் ( உதாரணம் : http://www.tn.gov.in/ ) இந்த விலாசங்களை ஆங்கிலம் தவிர இதர மொழி எழுத்துகள் கொண்டு குறிப்பிடுவதர்க்கான விஞ்ஞான ஆராய்ச்சிகளும், அரசியல் ஆய்வுகளும் முன்னேற்றம் அடைந்துள்ளன. விலாசங்களை தமிழகஅரசு.தமிழ் என்பது போன்று தமிழ் மற்றும் இதர மொழிகளில் குறிப்பிடும் காலம் விரைவில்.

இணைய தளங்களின் விலாசங்கள் ஒரு புறம் இருக்க, மின் அஞ்சல் (email) விலாசங்கள் தமிழ் மற்றும் இதர மொழி எழுத்துக்களால் குறிப்பிடும் சூழல் ஏற்பட இருக்கிறது. உதாரணம்: narayanan@imaginarymail.com என்பது போன்ற விலாசத்திற்கு பதிலாக நாராயணன்@தமிழஞ்சல்.தமிழ் என்பது போன்று தமிழ் மற்றும் இதர மொழி எழுத்துக்களால் (script) குறியிடலாம். 

tamil language script

tamil language script

இணைய தளம் ஆயினும் சரி, மின் அஞ்சல் ஆயினும் சரி, தமிழ் மற்றும் இதர மொழிகளில் ஏற்படுவதற்கு விலாசங்கள் மட்டும் போதாது. இது சார்பான இதர முன்னேற்றங்களும் ஏற்பட வேண்டும். உதாரணமாக தட்டச்சு செய்வத்தில் உள்ள இடர்பாடுகள் தீர வேண்டும். Google மின் அஞ்சல் தமிழில் டைப் செய்வதை மிகவும் லேசான விஷயம் ஆக செய்து விட்டது. இனி மேல் தமிழில் டைப் செய்வதற்கு நாம் தடுமாற வேண்டியது இல்லை. மற்றும் வேறு வேறு மொழிகளில் செய்திகள், கதை, கட்டுரைகள் (content) இணைய தளங்களில் ஏற்பட வேண்டும்.

இது போன்ற விசயங்களை (issues) Multilingualism என்ற தலைப்பில் உலகின் பல் வேறு நிபுணர்களும் நிறுவனங்களும் ஆய்வு செய்து ஆலோசித்து வருகின்றன. Google நிறுவனம் இந்திய மொழிகளில் மின் அஞ்சல் செய்வதனை இலகுவாக்கியிருக்கிறது. IDN எதிர் காலம் இது போன்ற Mutlilingualism விஞ்ஞான வளர்சிகளுடன் தொடர்புடையது.

இது தொடர்பான ALAC IDN liaison எனும் ஒரு சிறு பொறுப்பில் நான் இது போன்ற விஞ்ஞான வளர்ச்சிகளை கவனித்து, சேகரித்து வருகிறேன். உபயோகிப்பாளர் (User) தொடர்பு இந்த சிறு பணியினை சிறப்பாக செய்ய பெரும் அளவில் உதவும். IDN பற்றி உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பரிமாற வேண்டுகிறேன்.

ICANN IDN Wiki
ICANN ALAC IDN Working Policy Working Group
email in Indian languages
Google transliteration web application
ISOC India Chennai at-Large

அன்புடன்
சிவசுப்ரமணியன் முத்துசாமி
மின்னஞ்சல்: isolatedn (at) gmail (dot) com

No comments yet

Leave a reply